எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்கு கிடைத்துள்ள ஆதரவு வாக்குகளாக பதிவாகி வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற வாக்குப்பதிவு நாளான 19-ம் தேதி(இன்று) அன்று தி.மு.க.வினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
அப்போதுதான் இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் நமது கட்சித் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக் கொண்டு செயலாற்றுவதுடன் வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக் கூடிய முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.
இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அதற்கான பயிற்சியினை நமது சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால் நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.க.வின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க. கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.
விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க