முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு : கேமராக்கள் பொருத்தபட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
Vote 2024-01-05

Source: provided

சென்னை : தமிழ்நாடு முழுவதும் இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தபட்டு தீவிரமாக கண்காணிப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சரியாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தென் சென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல வடசென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கெல்லாம் காவல்துறை பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் இப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேமராக்கள் பொருத்தபட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து