முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-19

சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாக வாக்குச்சதவீதம் பதிவான தொகுதிகளை பார்க்கலாம்.

கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரித்த தொகுதிகள் - கள்ளக்குறிச்சி –78.77 ( 2019), 79.25 ( 2024), சேலம்–  77.86( 2019), 78.13( 2024), விழுப்புரம்  –74.56( 2019), 76.47( 2024), வேலூர்   – 71.32( 2019),73.42( 2024), கோயம்புத்தூர்( 2019),    –63.6  64.81( 2024), 

கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகள் - மத்திய சென்னை   –  58.95( 2019),53.91( 2024), தூத்துக்குடி – 69.43  ( 2019),    59.96( 2024), சிவகங்கை – 69.87( 2019),63.94( 2024), தேனி–  75.17 ( 2019),69.87( 2024), நாகப்பட்டிணம்  – 76.88 ( 2019),71.55( 2024).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து