முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Mukesh-Dalal 2024-04-22

Source: provided

சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். 

குஜராத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற மே 7-ம் தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது.  குஜராத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.  அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டு உள்ளது. 

இதே போன்று, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது.  அவருடைய வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம் பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது.  இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.  இதனையடுத்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனை குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் நேற்று தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

சூரத் மக்களவை தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என்று தெரிவித்து உள்ளார். 

இந்த தொகுதிக்கான தேர்தலில், தலால் மற்றும் கும்பானி தவிர சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பியாரேலால் பாரதி என 8  பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.  அவர்கள் அனைவரும் தங்களுடைய வேட்பு மனுக்களை நேற்று திரும்ப பெற்று விட்டனர்.  இதனால், தலால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து