முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Election 2023-11-06

Source: provided

புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மணிப்பூரில் உள் மணிப்பூர்,  வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும்,  வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 தொகுதிகளிலும் கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  69.18 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,  அன்றைய தினம் கிழக்கு இம்பால் மாவட்டத்திலும்,  விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன்போக்கி பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது.  இதனால் அங்கே 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.  மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏப்ரல் 22-ம் தேதி (நேற்று) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, நேற்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

இதேபோல்,  அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவின் போது,​ ​மாநிலத்தில் வன்முறை நடந்தது. இதனால், 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் ஆணையம்  அறிவித்தது. மேலும், நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டு துணை தலைமைத் தேர்தல் அதிகாரி லிக்கன் கோயு ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சியாங் மாவட்டத்தில் உள்ள ரம்காங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போக்னே மற்றும் மோலோம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து