முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
India-Meteorological 2022

புதுடில்லி,  தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும். வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம்.

இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் வெளியே வர வேண்டாம். டெல்டா மற்றும் வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து