எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்.
தி.மு.க. தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. 1969-ல் அமைந்த தி.மு.க. அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.
1969-ம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1969-ல் கணபதியாபிள்ளை ஆணையப் பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டது.
பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க.ஆட்சி.
1971-ல் குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டத்தின்படி 1,73,748 விவசாயத்தொழிளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனையை அவர்களுக்கே சொந்தமாக்கியது. 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து; கிடைத்த உபரி நிலங்களை லட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வழிவகை செய்தது.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், பணிக்கொடை வழங்கும் திட்டம் கண்டது. விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது.
1990-ல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது.மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990-இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது.
பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.
18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினர்களுக்கு 1,304 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளர்களுக்கு 11 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
44 தொழில்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 புதிய தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த அரசினால் பயனடைந்து வருகின்றனர்.
உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்பு தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியமும், தமிழ்நாடு இணையவழி தற்சார்பு தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000/- என்பது ரூ.1.200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாக கட்டிடம் கட்டப்பட்டு 2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை மற்றும் உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947-ம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இப்படி, தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு
21 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
-
ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலரஞ்சலி
21 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சல
-
சென்னை பிராட்வே பஸ் நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
21 May 2024சென்னை, நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
காவிரி ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
21 May 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகதாது அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு
21 May 2024கோபி : ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
-
தமிழ்நாட்டு மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
21 May 2024சென்னை : தமிழக மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள
-
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.ம்.சி. நீரை திறக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
21 May 2024டெல்லி : தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 2வது கட்டம் ஜூலையில் தொடக்கம்
21 May 2024சென்னை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த பிரபல யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
21 May 2024சென்னை, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது : 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
21 May 2024சென்னை : வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகுவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
-
பிரிட்டன் தேர்தலில் இந்தியர் போட்டி
21 May 2024லண்டன், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவர், அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
-
15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 May 2024சென்னை, 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என்று தெரிவித்துள
-
தீவிர காற்று சுழற்சி: சிங்கப்பூர் சென்ற விமானத்தில் திடீர் நடுக்கத்தால் பயணி பலி
21 May 2024பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கர்நாடகத்தில் துணை நடிகை கொலை: தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு
21 May 2024மைசூரு, கர்நாடகத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள வித்யாவின் கணவர் நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் நீட்டிப்பு
21 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இதே
-
கோடை விடுமுறையையொட்டி நெல்லை - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு
21 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியே தெரியும் நந்தி சிலை
21 May 2024சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்ததால் நீர் தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் வழக்கு: செல்போன் தரவுகளை மீட்க கெஜ்ரிவாலின் உதவியாளருடன் மும்பை விரைந்த போலீசார்
21 May 2024புதுடெல்லி : சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.