முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      தமிழகம்
Shivdas-Meena 2023-12-03

Source: provided

சென்னை : குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த 5.12.2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழக  மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 9.2.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக  மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மத்திய  அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து