முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவின் செயற்கைகோள் ஏவும் முயற்சி தோல்வி

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

பியோங்யன், ஏப். - 14 - சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா நடத்திய செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. குவங்மிங்சுங் - 3 எனும் செயற்கை கோளை நேற்று காலை வட பியோங்யன் மாநிலத்தின் சோல்சான் மாவட்டத்தில் உள்ள தொங்சாங்ரியில் அமைந்துள்ள மேற்கு கடல் செயற்கை கோள் ஏவு மையத்தில் இருந்து வட கொரியா ஏவியது. செயற்கை கோள் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்கு பின்பு உன்ஹா 3 எனும் செயற்கை கோளை சுமந்து சென்ற வாகனம் பல துண்டுகளாக வெடித்து சிதறியது. இதன் மூலம் வட கொரியாவின் செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன. வட கொரியாவும் தமது திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளது. வட கொரியாவின் செயற்கை கோள் ஏவும் முயற்சியால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. வட கொரியா செயற்கை கோளை ஏவிய உடனேயே தென் கொரியாவின் பாதுகாப்பு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. வட கொரியா தனது அணு ஆயுத ஏவுகணை செயல்பாடுகளால் உலக அளவில் எதிர்ப்பை சந்தித்தது. மேலும் வட கொரிய ஏவுகணை நுட்பம் சர்வதேச விதிகளை மீறுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் சில கோரி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்