முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 18 மே 2012      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா, மே. - 18 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் தர்மசா லாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.  இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரை இறுதிக்ககு (பிளே ஆப்) முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் விதி அடுத்த அணிகளின் வெற்றி தோல்வியை நம்பி உள்ளது.  பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் ஆட ம் கில்கிறிஸ்ட் நீண்ட இடைவெளிக்கு ப் பிறகு களம் இறங்கி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்க பலமாக மந்தீப் சிங், சிட்னிஸ், ஆகி யோர் ஆடினர்.  முன்னதாக பெளலிங்கின் போது, பஞ் சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி சென் னை அணியின் ரன்ரேட்டைக் கட்டுப் படுத்தினர். பிரவீன் குமார், அவானா மற்றும் அசார் மெக்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஐ.பி.எல். போட்டியில் 66 -வது லீக் ஆட்டம் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று பகலிரவு ஆட்ட மாக நடந்தது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் ஆடம் கில் கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெ வன் பஞ்சாப் அணியும் மோதின.  இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய சென்னை அணி பஞ்சாப்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண றியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்னை எடுத்தது. இதில் 1 வீரர் மட்டும் கால் சதத்தை தாண்டி னார்.  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டி. பிராவோ அதிகபட்சமாக, 43 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, ரெய் னா 17 ரன்னையும், ஜடேஜா 13 ரன்னையும், மார்கெல் 14 ரன்னையும், எம். விஜய் 10 ரன்னையும் எடுத்தனர்.  பஞ்சாப் அணி சார்பில் பிரவீன் குமார் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, அசார் மெக்மூத் அவா  னா ஆகியோர் தலா 2 விக்கெட்டையு ம், ஹாரிஸ் 1 விக்கெட்டையும் எடுத்த னர்.  பஞ்சாப் அணி 121 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிதான இல க்கை சென்னை அணி வைத்தது. அடுத் து களம் இறங்கிய அந்த அணி 16.3 ஓவ ரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்னை எடுத்தது.  இதனால் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத ன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.  பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் கில் கிறிஸ்ட் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 46  பந்தில் 64 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்ட ரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். மந்தீப் சிங் 21 பந்தில் 24 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, சிட்னிஸ் 11 ரன்னையும், அசார் மெக்மூத் மற்றும் டேவிட் ஹஸ்சே ஆகியோர் தலா 9 ரன்
னையும் எடுத்தனர்.  சென்னை அணி சார்பில், டி. பிராவோ 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹில்பென்ஹாஸ் மற்றும் மார்கெல் ஆகியோ ர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட
நாயகனாக ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்