முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., விமான தளம் மீது தாக்குதல் - 9 பேர் சாவு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத். ஆக. 17 - பாகிஸ்தானில் அந்நாட்டு விமான தளங்கள் மீது  நடத்தப்பட்ட தாக்குதலில் 8 தீவிரவாதிகள் உள்பட 9 பேர் உடல் சிதறி பலியானார்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 85 கி.மீ.தொலைவில் உள்ள  கம்ரா என்ற இடத்தில் பாகிஸ்தான் விமான படைக்கு  சொந்தமான விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தின் பிரதான வாயில் முன்பு  வந்த தீவிரவாதிகள்  தாங்கள் வைத்திருந்த கையெறி குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதை சற்றும்  எதிர்பாராத விமான தள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி எதிர்  தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். என்றாலும்  ஒரு விமானப்படை பாதுகாப்பு வீரர்  பலியானார்.

இந்த சம்பவத்தில் கம்ரா விமான தளத்தில் இருந்த ஒரு விமானத்திற்கு சேதம் ஏற்பட்டது.

காம்ரா விமான தளம் பாகிஸ்தான் விமான தளங்களில் மிகவும் முக்கியமானது. இங்கு அணு ஆயுதங்களும்  இருப்பதாக  கூறப்படுகிறது. ஆனால்  சம்பவம் நடந்த போது  அணு ஆயுதம்  தாங்கிய எந்த விமானமும் இல்லை என்று விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு  அந்த விமான  தளத்திற்கு கமாண்டோ படையினுரம் போலீஸ் அதிரடி படையினரும் விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய  தீவிரவாதிகள்  இந்த  தளத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து   புறப்பட்டு  இருட்டை  சாதகமாக பயன்படுத்தி தளத்தின் பிரதான கேட்டிற்கு வந்துள்ளனர் என்று விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள  9 அடி உயர இரும்பு முள்வேலி சுவற்றில் ஏறி இவர்கள்  இந்த  தளத்திற்குள் குதித்துள்ளனர்.

பாகிஸ்தானின்  வட மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக  பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் இந்த  தாக்குதலை  தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று  கூறப்படுகிறது.

அதிக பாதுகாப்பு நிறைந்த இநத முக்கியமான விமான தளத்திற்குள்ளேயே  தீவிரவாதிகள் நுழைந்து   இந்த பயங்கர தாக்குதலை நடத்தியிருப்பது பாகிஸ்தான் ராணுவத்தை  கலக்கம் அடை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்