முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது

மதுரை,ஏப்.- 8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

உலக பிரசித்தி பெற்றது மதுரை  மீனாட்சி அம்மன்கோவில். இங்கு உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து தினமும் தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழாதான் முக்கியமானது. இதில் மீனாட்சி,சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த வருட சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மீனாட்சியும், சுந்தரேசுவரர் - பிரியாவிடையும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் பகல் 12.1 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க, வேதமந்தி கோஷங்களுடன் சுந்தரேசுவரர் சன்னதியில் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பின்பு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.  கொடியேற்று நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்துகண்ணன், கோவில் இணை ஆணையர் பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவிழா தொடங்கிய முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு அம்மன், சுவாமி ப்ரியாவிடை ஆகியோர் கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளினர். ஒவ்வொரு நாளும் அம்மன்-சுவாமி காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்கள். வரும் 16ம் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மீனாட்சி,சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்