முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நோன்பு நேரத்தில் சாப்பிட்ட 29 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஆக.7 - பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 3 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். 

புனித ரமலான் மாதத்தில் அனைவரும் பகலில் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இரவில் மட்டும் உண்ண வேண்டும். 5 வேளை தொழுகை செய்ய வேண்டும். இறை சிந்தனையை தவிர வேறு கேளிக்கைகளிலோ இதர விஷயங்களிலோ மனதை செலுத்த கூடாது என்பது நியதி. 

பாகிஸ்தானை முஸ்லீம் நாடாக அரசியல் சட்டப்படியே அறிவித்திருப்பதால் அங்கே மத சடங்குகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. அதன்படி நோன்பு காலத்தில் யாரும் பொது இடத்தில் மற்றவர்களின் நோன்பை குலைக்கும் வகையில் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களை செய்யக் கூடாது. அப்படி செய்பவர்கள் கைது செய்யப்பட்டு 3 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவை சூரியன் மறைந்தது முதல் 3 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவசர சட்டம் கூறுகிறது. வெறும் சட்டம் போட்டால் மட்டும் போதுமா, அமல் செய்ய வேண்டாமா? எனவே பாகிஸ்தான் அரசும், பஞ்சாப் மாகாணஅரசும் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை நியமித்துள்ளன. அவர்கள்தான் பொது இடங்களில் சாப்பிடுபவர்களை பார்த்து உடனே கைது செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்