முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் ஒரு நாள் போட்டி இந்தியா அபார வெற்றி

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், அக். - 15  -  இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 126 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரங்கத்தில் இது வரை இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடியது. ஆனால் 3 -லும் தோல்வி அடைந்தது. 2 போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும், ஒரு ஆட்டத்தில் தெ. ஆ. அணியிடமும் தோற்றது. தற்போது  முதன் முறையாக இங்கு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்னைக் குவித்தது. இந்திய அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.  கேப்டன் தோனி அதிகபட்சமாக, 70 பந்தில் 87 ரன்னை எடுத்தார். சுரேஷ் ரெய்னா 55 பந்தில் 61 ரன்னை எடுத்தார். தவிர, கோக்லி 63 பந்தில் 37 ரன்னையும், காம்பீர் 33 பந்தில் 32 ரன்னையும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 22 பந்தில் 27 ரன்னையும் எடுத்தனர்.  இங்கிலாந்து அணி சார்பில், டெர்ன்பேச், ஸ்வான், படேல் மற்றும் பின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிரஸ்னன், பொபாரா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்க வில்லை.  இங்கிலாந்து அணி 301 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 36.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி இந்தப் போட்டியில் 126 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.  இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் குக் 63 பந்தில் 60 ரன் எடுத்தார் . டிராட் 42 பந்தில் 26 ரன்னையும், பீட்டர்சன் 19 ரன்னையும், படேல் 16 ரன்னையும், பின் 18 ரன்னையும் எடுத்தனர்.  இந்திய அணி சார்பில் ஜடேஜா 34 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தா ர். அஸ்வின் 36 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ் 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரவீன் குமார் 1 விக்கெட் எடுத்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்