முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஆஸ்திரேலியா, பாக்., அணிகள் தோல்வி

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புவனேஷ்வர் - புவனேஷ்வரில் தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகளின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சித் தோல்வி கண்டன.
உலக ஹாக்கி அணிகள் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது. மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்த்தியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் சாம் வார்ட் என்பவர் 27 மற்றும் 56-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அதிர்ச்சி அளித்தார். ஆட்டம் தொடங்கி 6-வது நிமிடத்திலேயே அலஸ்டைர் புரோக்டன் முதல் கோலை அடித்தார். ஆஸ்திரேலியாவுக்காக கிறிஸ் சிரியெல்லோ 54-வது நிமிடத்தில் ஒரே கோலை அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் டாங்கை கோசின்ஸ் மூலம் முன்னிலை பெற்றது. 2-வது கால்மணி நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் இல்லை. பிறகு பாகிஸ்தான் அணியின் முகமது இம்ரான் 36-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இதற்கு 7 நிமிடங்களுக்குப் பிறகு பெல்ஜியம் அணியின் தாமஸ் பிரையல்ஸ் ஒரு அபாரமான கோலை அடிக்க அதுவே வெற்றிக்கான கோலாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து