முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தல்: களத்தில் மொத்தம் 673 வேட்பாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில்  நடைபெறவுள்ள சட்டமன்ற  தேர்தலில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் வருகிற  பிப்ரவரி 7ம் தேதி சட்டமன்ற தேர்தல்  நடைபெறுவதையொட்டி  மனுக்களை  வாபஸ் பெற  இன்றே கடைசி நாளாகும். 20 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றன ர்.  டெல்லியில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இது குறித்து  டெல்லி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில் டெல்லியின் வடக்கு பகுதியில்  உள்ல புராரி தொகுதியில் அதிகபட்சமாக  18 பேர்  போட்டியிடுகின்றனர்.  தெற்கு டெல்லியில்  அமைந்துள்ள  அம்பேத்கர் நகர் தொகுதியில் குறைந்தபட்சமாக  4 பேர் போட்டியிடுகின்றனர்.  பா.ஜ.க.சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடி போட்டியிடும் கிருஷ்ணாநகர் தொகுதியில் 13 பேரும்,  ஆம்  ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்  போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் 13  பேரும் போட்டியிடுகின்றனர்.
 
அதேபோல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  அஜய்  மக்கான் போட்டியிடும் சதார்   பஜார் தொகுதியிலும் 13 பேர்  போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்டா முகர்ஜி போட்டியிடும்   கிரேட்டர்  கைலாஷ்  தொகுதியில்   8 பேர் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி  மாதம் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று   10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து