முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      உலகம்
America 2024-04-30

Source: provided

சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. 

எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதே வேளை ஹமாஸ் ஆயுதக் குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் உள்பட 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அதே போல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. 

அதே போல், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல், இந்திய பெருங்கடல்களில் பயணிக்கும் இஸ்ரேல் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  2 அமெரிக்க போர் கப்பல்கள், சரக்கு கப்பல் என மொத்தம் 3 கப்பல்கள் மீது இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து