முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பகல் 11 மணிக்கு டெல்லி  சிறிகோட்டை அரங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர்  பேசும்போது கூறியதாவது,

இந்தியாவின் மிகச் சிறந்த நட்பு நாடு அமெரிக்காதான் என்று நான் நம்புகிறேன். சமீப  ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மட்டுமே வறுமையில் இருந்து ஏராளமான மக்களை  மீட்டுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த பிராந்தியத்தில்  ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.

அணுசக்தி துறையில் இந்தியாவின் உண்மையான நல்ல நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தேவையான எல்லா  உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.  இதை அமெரிக்கா வரவேற்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு  கொடுக்கும்.

பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா போன்ற நாடுகள் சுத்தமான எரிபொருளுக்கு மாற வேண்டியது  அவசியமாகும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.ஒரு நாட்டில் பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சி அமையும். பெண்கள் வெற்றி பெற்றால், அந்த  நாடே வெற்றி பெறும்.நாட்டில் பல மதங்கள் இருக்கலாம்.

ஆனால் அவற்றின் இலக்கு ஒன்றுதான். இந்தியாவில் பல  மதங்கள் இருந்தாலும், எந்த மதச்சார்பின்மையும் இல்லாத விஷயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே தான் 35  வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தை உரிய முறையில் பயன்படுத்தும் போது  நமது நாடுகள் மேலும் வலிமை பெறும்.இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்கள் அமெரிக்கா வருகிறார்கள்.
 
ஆனால் இந்திய இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி வருவதை விட அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும்  என்பதையே நான் விரும்புகிறேன். இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்கா வருவதை நான் வரவேற்கிறேன். இந்தியர்கள் மீது  எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்துவதை நாங்கள் பெருமையாகக்  கருதுகிறோம். இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார்.

சமையல்காரரின் பேரனான நான் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறேன். உலகில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மட்டுமே இதுபோன்று நடப்பது  சாத்தியமாகும்.நமது இரு வரலாறு வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நமது சிந்தனைகள்  ஒன்றுதான்.அமெரிக்கர்களும், இந்தியர்களும் மிகச் சிறந்த உழைப்பாளிகள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலமாக உள்ளது.இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.

ஆனால் கடவுளின் கண்ணுக்கு நாம்  அனைவரும் சமம்.இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்பதால் அதை நினைக்கும்போது  எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியா எனக்கு இந்த கவுரவத்தை கொடுத்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த  விவேகானந்தரை 150 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்று உபசரித்தது.  அவர்தான்  அமெரிக்காவுக்கு யோகாவை  கொண்டு இந்தியாவின் கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது.எனவே இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எல்லா  வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும்.
 
இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.உள் கட்டமைப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா  விரும்புகிறது. அது போல பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து  செயல்படும்.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்தால், இந்த உலகம் என்றென்றும் பாதுகாப்புடன் இருக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்  எங்களை பல வழிகளில் பலப்படுத்தியுள்ளனர்.

அது போல இங்கு உள்நாட்டில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுத்து இருக்கிறீர்கள். இதன் மூலம்  ஜனநாயகத்தை பேணுவதில் இந்தியா, உலகின் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.வாழ்வில் நான் பல தடவை, என் நிறம் காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளேன். நான் கிறிஸ்தவன் அல்ல முஸ்லிம் என்று கூட வதந்தி கிளப்பினார்கள்.ஆனால் நான் பொறுமையை  கைக்கொண்டேன்.

அதில்தான் மதத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.பெண்களுக்கு நாம் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும். நான் மிகவும் மன உறுதி கொண்ட, தைரியமான பெண்ணை திருமணம் செய்து இருப்பதை நீங்கள் கவனித்து  இருக்கலாம்.நான் தவறு செய்யும் போது என் மனைவி மிச்செல், அதை தட்டிக் கேட்க தவறுவதே இல்லை. இது அடிக்கடி  நடக்கும்.எங்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அழகான, வலிமையான பெண்ணால்  சூழப்பட்டுள்ளேன். மிச்செல் என்னை விட மிகவும் நன்றாக நடனம் ஆடுவார்.

அவர் அளவுக்கு என்னால் ஆட முடியாது. இது எனக்கு சில சமயம் கஷ்டமாகக் கூட இருக்கும்.எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசையாக உள்ளது. ஆனால் எனது  சீக்ரெட் சர்வீஸ் படையினர் அதற்கு என்னை அனுமதிப்பதே இல்லை. இந்திய குடியரசு தின விழாவில் மோட்டார் சாகசம் செய்யப்பட்டது போல எனக்கும் செய்ய வேண்டும் போல உள்ளது.ஒரு  பெண் தலைமையில் எனக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்ட போதும், முப்படை அணிவகுப்பில் பெண்கள் அணிவகுத்ததை பார்த்த போதும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

செனோரிட்டா... படே படே தேஷோன்  மெய்ன்.... நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் (இது தில்வாலே துல்ஹனியா படத்தில்  நடிகர் ஷாருக்கான் பேசும் வசனம்).இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரியாத வரை தொடர்ந்து வெற்றிகளை பெறும். எல்லா இந்தியர்களும் சினிமாவுக்கு போகிறார்கள். ஷாருக்கான் நடிப்பை கை தட்டி ரசிக்கிறார்கள்.

தடகளத்தில் மில்கா சிங் சாதித்தபோது எல்லா இந்தியர்களும் கைதட்டி  வரவேற்றீர்கள். இந்த உணர்வு உள்ளவரை இந்தியா தொடர்ந்து வெற்றி பெறும். இவ்வாறு ஒபாமா பேசினார். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட அரங்கில் ஒபாமா பேசத்  தொடங்கியதும் ‘‘நமஸ்தே’’ என்று கூறினார். பேச்சை முடிக்கும் போது, ‘‘பகுத் தனியாவத் (மிக்க நன்றி) என்று  கூறினார்.பிறகு பார்வையாளர்கள் பக்கம் சென்று கையசைத்தார். சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது லகான்  படத்தில் வரும் ‘‘ஓ... மித்வா...’’ பாடல் ஒலிபரப்பானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து