முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஒரே நாளில் 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி  - திருப்பதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 84 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தது சாதனையாக கருதப்படுகிறது. கடந்த புனித வெள்ளியில் தொடங்கி தொடர்ந்து 3 நாள் அரசு விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை சந்திர கிரகனம் என்பதால் கோவில் நடை காலை 9 முதல்  இரவு 7 மணி வரை மூடப்பட்டது. 8 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் கட்டுக்கடங்காமல்  இருந்தது.

பக்தர்கள் வசதிக்காக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் இரவு 6 மணிவரை 84 ஆயிரம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அப்படியும் கோவிலுக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஒரே நாளில் 84 ஆயிரம் பகதர்கள் மூலவரை தரிசனம் செய்தது வரலாற்று சாதனை என தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து