முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மே 23, 24-ம் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை வர்த்தக மையத்தில் உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாடு, மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் செய்ய கடைசிநாள் இம்மாதம் 25-தேதி ஆகும். தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015 தொழில்  பொருட்காட்சியில்கலந்துக்கொள்வதற்காக, முன்பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது.

 இது  குறித்து  தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை வர்த்தக மையத்தில், 2015 மே, 23 மற்றும் 24 ல் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசு தொழில் பொருட்காட்சியினை அவ்வளாகத்தின் பிறிதொரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை 250 க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்கங்களில் பார்வைக்கு வைத்திருப்பதை காண்பார்கள்.

இப்பொருட்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு  www.tamilnadugim.com இணையதளத்தின் வழியாக முன் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய வர்த்தகம், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு வன்பொருட்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணித் துறைகளை முன்னிறுத்துவதால் ஈர்க்கப்பட்டு, பொருட்காட்சிக்கான முன்பதிவு வேகமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். பொருட்காட்சி அ கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். அரங்கத்திற்கான இடம்கட்டணம் இன்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சிக்கு
விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுத்து இடம் வழங்கும்.

இம்மாநிலம் இதுவரை நடத்திய முதலீட்டினை ஈர்க்கும் முயற்சிகளிலேயே தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு – 2015 தான் மிகப்பெரிய முயற்சியாகும். இம்மாநாட்டின்போது நடத்தப்படவுள்ள பொருட்காட்சியானது தொழில் முதலீட்டிற்கு முதுகெலும்பாக திகழும் உபபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்குனர் துறையின் மேம்பாட்டினை உறுதிசெய்யும். தகுந்த நில அமைப்பு, இயற்கை வளம் மற்றும் திறன் கொண்ட பணியாளர் ஆகியவற்றால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக இம்மாநிலம் நீண்டகாலமாக திகழ்கிறது. முதலீட்டினை மேலும் ஈர்ப்பதற்காக,  தொழில்துறை, வெளிநாடுகளில் இரண்டு சுற்றாக கருத்தரங்குகளை நடத்தியபோது, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, உள்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் வகையிலும், அவர்களுடன் இதற்கென கலந்துரையாடவும் மற்றும் அவர்கள் தங்களின் தொழிலை இம்மாநிலத்தில் விரிவாக்கம் செய்யவும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களில் இத்தகைய சுடியன ளுhடிறள நடத்தியுள்ளது.

மேலும், மும்பை, அகமதாபாத், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், தமிழ்நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களிளும் Road Show எனப்படும் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு / உடனடி உதவிக்கு
1. 8056202050
2. 9952944630
3. 9994212176
கீழ்க்கண்ட QR Code–னை மாநாட்டில் பங்கேற்பதற்கு ஸ்கேன் செய்யவும் அல்லது  www.tamilnadugim.comஎன்ற இணையதளத்தினை பார்க்கவும். தொழில் முதலீட்டாளர்கள் இந்த நல்ல அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியில்
பங்குபெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து