முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் : சாய்னா கால் இறுதியில் தோல்வி

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

ஜாகர்தா - இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி அந்த நாட்டு தலைநகர் ஜாகர்தாவில் நடைபெறுகிறது.இந்த பந்தயத்தில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி அடைந்தார். அவரை சீனாவின் வாங் சிக்சியான் வீழ்த்தினார்.

சாய்னா நேவால் 21-16,12-21, 18-21என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 69நிமிடம் நடந்தது. இந்த தோல்வி சாய்னாவிற்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.ஏனெனில் அவர் இந்த இந்தோனிசிய ஓபன் சீரிஸ் போட்டியில் 3முறை சாம்பியனாகி இருந்தவர் ஆவார்.அவர் 2009.2010, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து