முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் கனவான, தூய்மையான இந்தியாவை உருவாக்க மக்கள் பாடுபட வேண்டும் : கவர்னர் ரோசய்யா வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மகாத்மா காந்தியின் தத்துவார்த்துவங்கள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளன. காந்தியின் கனவான  தூய்மையான இந்தியாவினை இந்த சிறந்த தேசத்தின் குடிமக்கள் என்ற முறையில் நாம்  உருவாக்க வேண்டும் என்று கவர்னர் ரோசய்யா கூறினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா நேற்று உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, மகாத்மா மிகச்சிறந்த தேசிய தலைவர்.

சுதந்திர போராட்டக்காரர். ஒரு சமூக சீர்திருத்த வாதி. அவர் அகிம்சையையும் உண்மையையும் பிரச்சாரப்படுத்தியவர். அன்னிய பொருட்களை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டவர்.  காந்தியின் தத்துவார்த்துவங்கள் இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. பல நாடுகள் வன்முறை மற்றும் குற்றவியல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் காந்திஜியின் தத்துவார்த்துவங்கள் இன்றைக்கும் மனிதநேயத்திற்கு தேவையான ஒன்றாக உள்ளது. காந்திஜியின் வாழ்க் கை ஒரு செய்தியாகும். அவரது வாழ் க் கை மனித நேயத்திற்கான நம்பிக் கை ஆகும். அவரது பாதை அமைதிக்கு வழிகாட்டுவதுடன் எதிர் காலத்திற்கான உந்துணர்வாகவும் உள்ளது. தீவிரவாதமும் வன்முறைகளும் அசிங்கமான முகங்களுடன் இன்றைக்கு எழுந்து வருகின்றன.

காந்தியின் தத்துவார்த்துவங்களை நமது இளைய தலைமுறையினருக்கு போதிக்க வேண்டும் .தூய்மையான இந்தியாவினை உருவாக்க வேண்டும் என்பதே காந்தியின் நோக்கமாக இருந்தது.நாட்டின் வளம் தரமான குடிமக்களை சார்ந்தே இருக்கிறது என்று காந்தி கூறினார். மகாத்மா காந்தியின் கனவு மற்றும் தேசப்பிதாவின் கனவு இன்னும் பூர்த்தியடையவில்லை.  மிகச்சிறந்த தேசத்தின் குடிமக்கள் என்ற முறையில் நாம்  தூய்மையான, பசுமையான, சுய சார்புள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்