முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜியின் 2வது கட்ட கோப்புகள் இந்த மாதம் வெளியிடப்படும் - மகேஷ் சர்மா

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 2வது கட்ட கோப்புகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். டெல்லியில் அவர் நேற்று கூறுகையில், ஒவ்வொரு மாதமும் நாங்கள் நேதாஜியின் 25 கோப்புகளை வெளியிட உள்ளோம். இந்த மாதத்திற்கான கோப்புகளை வெளியிட நாங்கள் தயாராகி விட்டோம்என அவர் தெரிவித்தார்.

இந்திய அரசு முன்னர் கூறுகையில்  நேதாஜியின் கோப்புகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட உள்ளோம். நேதாஜியின் 119வது பிறந்த நாளின் போது பிரதமர் மோடி நூற்றுக்கணக்கான கோப்புகளை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிட்டார். இந்த கோப்புகள் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டது. நேதாஜி தொடர்பான அடுத்த கட்ட கோப்புகள் பிப்ரவரி 23ம் தேதியன்று வெளியாகும். அதேப்போன்று ஒவ்வொரு மாதமும் நேதாஜியின் கோப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று ஒரு தகவல் தெரிவித்தது-

கடந்த மாதம் வெளியிடப்பட்ட கோப்புகளில் 16ஆயிரத்து 600 பக்கங்கள் இருந்தன. அவை வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள் ஆகும். பிரிட்டிஷ் ராஜ்ய காலத்தில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு வரையிலான கால கட்டம் வரையில் இந்த கோப்புகள் இருந்தன என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்திய ஆவண காப்பக துறையில் உள்ள நேதாஜியின் கோப்புகளை பாஜக அரசு வெளியிட்டு வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக வெளியிடப்படும் அனைத்து கோப்புகளை பாதுகாப்பதற்காக அதற் கென்று ஒரு தனி இணைய தளத்தை இந்திய ஆவண காப்பக துறை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நேதாஜியின் குடும்பத்தினரை சந்தித்து நேதாஜி சம்பந்தப்பட்ட கோப்புகளை அரசு வெளியிட உள்ள தகவலை தெரிவித்தார். கடந்த 70ஆண்டுகளுக்கு முன்னர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமானத்தில் செல்லும் போது இறந்த தாக் தெரிவிக்கப்பட்டது . நேதாஜி நிலை என்ன என்பது புரியாத புதிராக இது வரை இருக்கிறது.

கடந்த 1945ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம்தேதியன்று நேதாஜி ஒருவிமான விபத்தில் இறந்ததாக விசாரணை நடத்திய இரு கமிஷன்கள் தெரிவித்தன. நேதாஜி என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை செய்வதற்காக நீதிபதி எம்.கே. முகர்ஜி தலைமையிலான 3வது குழு நியமிக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு கூறுகையில் 1945ம் ஆண்டிற்கு பின்னர் நேதாஜி உயிருடன் இருந்தார் என்று தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்