முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் மரணம்

சனிக்கிழமை, 26 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

கொச்சி - தமிழ் சினிமாவில் பழமையான நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் நேற்று மரணமடைந்தார்.கே.ஆர் விஜயா தமிழ் சினிமாவில்  ‘கற்பகம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தார்.  எம்.ஜி.ஆருடன் விவசாயி, நல்லநேரம், நான் ஏன் பிறந்தேன் போன்ற படங்களில் நடித்தவர் கே.ஆர்.விஜயா. நடிகர் திலகம் சிவாஜியுடன் ஊட்டி வரை உறவு, நெஞ்சிருக்கும்வரை, திரிசூலம், ரிஷிமூலம், பாரதவிலாஸ், கிரகபிரவேசம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் கே.ஆர்.விஜயா. முத்துராமன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்ற நடிகர்களுடனும் நடித்தவர் கே.ஆர்.விஜயா.

தற்போது இவர் சில சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்பேதே 1966ல் பிரபல தொழிலதிபர் வேலாயுதத்தை திருமனம் செய்தார் கே.ஆர்.விஜயா. இவரது கணவர் பிரபல நிதி நிறுவனமான சுதர்ஸன் சிட் பண்டின் சேர்மனாக இருந்தார்.  வேலாயுதம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார்.   வேலாயுதம்-கே.ஆர்.விஜயா தம்பதிகளுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்