முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி

புதன்கிழமை, 22 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

பிரிட்ஜ்டவுன் : மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.

மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி மே.இ.தீவுகளில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும். பார்படோசில் நேற்று முன்தினம் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மே.இ.தீவுகள் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மே.இ.தீவுகள் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 125 ரன்னும், ராம்தின் 91 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 15 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேக்ஸ்வெல்லுக்கு, மிட்சேல் மார்ஷ் புகழாரம்

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் சுமித் 78 ரன்களும், ஆல்ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் 79 ரன்களும் எடுத்தார்கள். ஆனால் மேக்ஸ்வெல் 26 பந்துகளில் அடித்த 46 ரன்கள் தான் அந்த அணி வெற்றி பெற உதவியது.  இந்த போட்டிக்குப் பிறகு மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து பேசிய மிட்செல் மார்ஷ், “மறுமுனையில் இருந்துக்கொண்டு இது போல் ஒரு இன்னிங்சை பார்த்தபோது உண்மையில் எனக்கு பேச்சே வரவில்லை. மேக்ஸிக்கு தன் மீது நிறைய சந்தேகம் இருந்தது, அவர் சிறந்த பார்மிலும் இல்லை. ஆனால் அவர் ஏன் முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதை அவரது இன்றைய ஆட்டம் காண்பிக்கிறது.  அவர் மிகவும் ஆபத்தான வீரர். ஒரு சில ஓவர்களில் போட்டியை வெல்லும் திறமைக் கொண்டவர். மேக்ஸி ஒரு சுதந்திரமான ஆன்மா. அவரை அவர் விருப்பத்திற்கு விளையாட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்