முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மே.இ.தீவுகள் இடையேயான முதல் டி-20 போட்டி அமெரிக்காவில் இன்று நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

லாடெர்ஹில்  - இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்த போது இந்தியா - மே.இ.தீவுகள் அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டி-20 தொடரை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் டி-20 போட்டி இன்றும், 2-வது போட்டி 28-ம் தேதியும் அமெரிக்காவில் உள்ள லாடெர்ஹிலில் நடக்கிறது. இந்திய நேரடிப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர்தவான், ரோகித்சர்மா, விராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் முகமது சமி, புவனேஸ்குமார், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நடந்த டி-20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் மே.இ.தீவுகள் அணியிடம் இந்தியா தோற்றது. இதற்கு பழிவாங்கும் விதத்தில் விளையாட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு உள்ளது. டி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிக்சர் மழை பொழிந்த கார்லோஸ் பிராத்வெயிட் மே.இ.தீவுகள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கிறிஸ்கெய்ல், பிளட்சர், போல் லார்ட், ரஸ்சல், சாமுவேல்ஸ், சிம்மான்ஸ், சுனில் நரீன், பெய்ன் பிராவோ, சார்லஸ், போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லை சீக்கிரம் வெளியேற்றுவது அவசியமாகும். அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த நடத்தும் வகையில் நடைப்பெறவுள்ள இந்த போட்டியை காண அங்கு ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்