முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் உருவெடுக்கும் தீவிரவாதம் குறித்து,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி-சுஷ்மா சுவராஜ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூவுடன் தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜான் கெர்ரி நேற்று தலைநகர் டெல்லிக்கு நேற்று வந்தார். அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் . அந்த பேச்சு வார்த்தையின் போது தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தீவிரவாதம் அருகாமை நாடான பாகிஸ்தானில்  இருந்து உருவாவது குறித்தும் அதனை ஒடுக்குவதற்கு என்ன நடவடிக்கைகளை கூட்டாக எடுக்க வேண்டும் என்றும் இதர விஷயங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தார்கள்.

தலைநகர் டெல்லியில் 2வது இந்தியா- அமெரிக்கா இடையிலான ராஜிய மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தை  நேற்று நடை பெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்ககள்  மற்றும் இந்திய வர்த்கத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர்  தலைமை தாங்கினார்கள்.  இரு தரப்பினரும், எரி சக்தி மற்றும் வர்த்தம் , வாணிகம் துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசினார்கள். இந்தியா- அமெரிக்கா இடையே கடந்த 2015ம் ஆண்டு  இரு தரப்பு வர்த்தகம் 10ஆயிரத்து  900 கோடி டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த வர்த்தக  மதிப்பு  7லட்சத்து 63ஆயிரம் கோடி டாலராக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்