முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: மோடி அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ரூ.59.000 கோடி பெறுமான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ், தொழில்நுட்ப உதவி, ஆதரவு இல்லையெனில் இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. எனவே ஒப்பந்தத்தின் அம்சங்களை மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

மேலும் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அசல் திட்டம் என்னவானது, 36 போர் விமானங்களை மட்டும் வாங்குவதன் மூலம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எப்படி இந்தியா ராணுவ ரீதியாக தனது இடைவெளியை நிரப்பும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சிச் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.அந்தோனி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமரின் ‘மேல் இன் இந்தியா’ திட்டம் எங்கு சென்றது? என்று கேள்வி எழுப்பினார்.  “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 126 விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் திட்டமிட்டோம். ஒப்பந்த விலை குறித்து நான் முழு விவரங்கள் தெரியாத வரை கருத்துக் கூற விரும்பவில்லை. இறுதி ஒப்பந்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

‘உத்வேகம்’ பெற்ற சில ஊடகங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு பணத்தை மிச்சம் பிடித்துள்ளது என்று கூறுகிறது, ஆனால் இது உண்மையல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கால ரஃபேல் ஒப்பந்தத்தையும் இப்போதைய ஒப்பந்தத்தையும் ஒப்பிடுதல் கூடாது” என்றார் அந்தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்