முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதம், போரால் பாதிக்கப்பட்ட உலகத்திற்கு போப் கிறிஸ்துமஸ் செய்தியில் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாடிகன் : தீவிரவாதம், போரால் பாதிக்கப்பட்ட உலகிற்கு போப்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி  நம்பிக்கை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்கு சென்று நள்ளிரவு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதுடன் புத்தாடை அணிந்து, இனிமையான சுவைகளை அளிக்கும் கேக்குகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அளித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் கிறிஸ்துமஸ் விழாவின் போது  அதை கொண்டாடிய மக்கள்  தங்கள் வீடுகளில் ஒளி பொருந்திய நட்சத்திர விளக்குகளை  கட்டி இருந்தார்கள். இயேசு பிரானின் பிறப்பை நினைவூட்டும் திரு உருவ பொம்மைகளையும் அவர்கள் தங்கள் வீடுகளில்   வைத்திருந்தார்கள்.

இந்த நன்னாளில் , உலக கிறிஸ்துவ மக்களின் மத குருவான போப் வாடிகனில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி அளித்தார். அவரது செய்தி போராலும், தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட உலகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக இருந்தது. கிறிஸ்துமஸ் நாளன்று வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முன்பாக 40 ஆயிரம் கிறிஸ்துவர்கள் திரண்டு போப்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை   உணர்ச்சி பெருக்குடன் கேட்டு உள்ளம் மகிழ்ந்தார்கள்.

தற்போதைய போப்  பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ஆவார். வாய்ப்புகளற்றவர்கள், அகதிகள், மற்றும் பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கைஅளிக்கும் ஈர்ப்பாக கிறிஸ்துமஸ்  ளஇருக்க வேண்டும். சிரியாவில் அதிகரித்துள்ள தீவிரவாதம் முடிவிற்கு வர வேண்டும். நைஜீரியாவில் பாகுபாடு இல்லா நிலை உருவாக வேண்டும் என்றும் போப் தனது கிறிஸ்துமஸ்  வாழ்த்து செய்தியில் வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்