முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

 ஈரோடு மாநகராட்சி, பாலக்காட்டூர், சூரியம்பாளையம் மண்டலம் 1 பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் இன்று (19.01.2017) மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15 கோடியே 98 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு) கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும்  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.

          இவ்விழாவில்  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  தெரிவித்ததாவது,

          மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு  குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை வழங்கியுள்ளார்கள். இத்திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாமல்,  தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ள்ளார்கள். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், 4 செட் சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். சமூக நலத்துறையின் மூலம் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக வழங்கியவர் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா .

          அதேபோல் வீடுகளுக்கு 100 யூனிட் வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்கள். ஏழை, எளியோர் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

          இவ்விழாவில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  தெரிவித்ததாவது,

          மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய குடியிருப்பு கட்ட நிதியுதவி வழங்கப்படும். குடிசைப்பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ள குடும்பங்கள் தாங்கள் வாழும் இடத்தின் நில உரிமத்திற்கான ஆவணம் உடையவர்களாக இருப்பின் பயனாளிகள் தாமாக வீடுகளை கட்டுதல் திட்டத்தின் கீழ் தகுதி உடையவர்களாவர். தாங்கள் வசிக்கும் மனைக்கான பட்டா இருந்தால் போதுமானதாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் தங்களது பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தினை அணுகி அதற்கான மனுவினை அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு ஒருங்கிணைந்த வீட்டுவசதி திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசால் ரூ.1.50 இலட்சம் மற்றும் மாநில அரசால் ரூ.60,000ஃ- மொத்தம் மானியமாக ரூ.2.10 இலட்சம் வழங்கப்பட்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை 4 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் வீட்டின் அடித்தளம் அமைத்தவுடன் முதல் தவணைத் தொகையாக ரூ.50,000ஃ-, கதவு மற்றும் ஜன்னல் மேல்மட்டம் கட்டி முடித்தவுடன் 2வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, கான்கிரீட் மேற்கூரை முடித்தவுடன் 3-வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, அனைத்து கட்டுமான பணிகளும் கட்டி முடித்தவுடன் 4-வது தவணைத்தொகையாக ரூ.60,000ஃ- என மொத்தம் ரூ.2.10 இலட்சம் வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும்  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்                உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15.98 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டிட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ)கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வெ.சுப்பிரமணியன் (கோவை சரகம்),  கண்காணிப்பு பொறியாளர் வி.சுப்பிரமணியன் (ஈரோடு), நிர்வாக பொறியாளர் கே.ஜி.நஞ்சப்பன், உதவி பொறியாளர் தமிழரசு, உதவி செயற்பொறியாளர் டி.ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்