முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் ரிவேரா-17 நாள்சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா:கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார்.

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள்  நடைபெறும் ரிவேரா-17 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார். ரிவேராவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற  சுமார் 8 ஆயிரம் பேர்   பங்கேற்ற 9.9 கி.மீ தூர  மாரத்தான் ஒட்டத்தில் பங்கேற்று  வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கினார். விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் வண்ணமயமாக வெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உள்நாட்டிலிருந்தும் தெற்காசியா ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும்  250க்கும் மேற்பட்ட பல்கலைக் கழங்கள் மற்றும்  கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்  பங்கேற்று உள்ளனர். ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவமாணவி கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், வாலிபால், டென்னிஸ், தடகளம், பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா  உள்ளிட்ட 16 விதமான விளையாட்டு போட்டிகளும் நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, குறும்படம் தயாரித்தல் என மொத்தம் 150  நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. ரிவேரா கலை விழா  தொடக்கமாக விஐடி மூன்றாவது நுழைவு பகுதியிலிருந்து நேற்று   சுமார் 8  ஆயிரம் பேர் பங்கேற்ற 9.9 கி.மீ தூர  மாரத்தான் ஒட்டம் நடத்தப்பட்டது. அதனை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் துணை வேந்தர் முனைவர் ஆனந் எஸ்.சாமுவேல் இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து விஐடி நூலகம் எதிரில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் ரிவேரா கலைவிழா வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்க  ரிவேரா மாணவர் குழு அமைப்பாளர் ராஷி ஸ்ரீவத்சவா  வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில்  இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிவேரா கலைவிழாவை வண்ண பலூன்கள் பறக்க விட்டு தொடங்கி வைத்து மாரத்தான் ஒட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கி பேசுகையில் விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இப்பல்கலைகழகத்தின் கட்டமைப்புகள் உங்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்பாக அமைந்து உள்ளது . நான் எனது இளமை காலத்தை நினைத்து பார்க்கையில் நான் எனது பள்ளிக்கல்வியை உண்டு உறைவிட பள்ளியில் படித்தேன். இது போன்ற கல்வி நிலையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு சாதனை படைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில்  எதாவது ஒரு மறக்க முடியாத சம்பவம் இருக்கும் 2011 ஆண்டில் நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நானும் பங்கேற்று அதில்  வெற்றி பெற்று உலக கோப்பை பரிசு பெற்றது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும் என்றார். அதனை தொடர்ந்து  இரவு  விஐடி திறந்த வெளி அரங்கில்  சினிமா பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை  இரண்டாம் நாள் நிகழ்வாக  அர்மான் மாலிக் குழுவினரின் பிரிஸ்க் பேக்டர் நிகழ்வாக கல்லூரிகளிக்கிடையேயான நடன போட்டியும் நடைபெறுகிறது. பிற்பகல் விஐடி வளாகத்தில் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஐக்கியா என்ற  நிகழ்வினை விஐடி மாணவமாணவியர் நடத்தி காட்டுகின்றனர். 4 ந்தேதி நிகழ்வாக பிரபல இந்தி பட இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பர்ஹான் அக்தர் குழுவினரின் இந்தி பாடல்  இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5 ந்தேதி நடைபெறும் ரிவேரா நிறைவு விழாவில் இந்தி திரையுலக நட்சத்திரம் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா சிறப்பு விருந்தினாராக   பங்கேற்று ரிவேரா யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிறைவு விழா பேருரை வழங்குகிறார். இதில் ரூ.25 லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்