முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்கையில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழை குறுக்கீடு

நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் ஹாமில்டனில் நடந்தது. மழைக்காரணமாக ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து 34 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 53 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் புரௌன்லி 31 ரன்னும், நீசம் 29 ரன்னும், கிராண்ட்ஹோம் அவுட்டாகாமல் 19 பந்தில் 34 ரன்னும் சேர்த்தனர்.

நியூசிலாந்து தோல்வி

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டி காக் (69), அம்லா (35) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அதன்பின் வந்த டு பிளிசிஸ் (14), டுமினி (1), பெஹார்டியன் (0), கிறிஸ் மோரிஸ் (16) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் 7-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் பெலுக்வாயோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 33.5 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தொடர்ந்து 12 வெற்றி

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலைப் பெற்றுள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்றிருந்தது. தற்போது இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக தொடர்ந்து 12 முறை வெற்றியை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்