முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் 1000 மரக்கன்றுகளை நட்ட கே.டி.வி தொழில்சாலையினர்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கே.டி.வி ஆரோக்கிய உணவு என்கிற தனியார் தொழிற்சாலையின் சார்பாக புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.
வர்தா புயலால் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10ஆயிரம் மரங்கள் சாயந்தது. இந்நிலையில் விழுந்த மரங்களுக்கு பதில் கும்மிடிப்பூண்டியில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கே.டி.வி ஆரோக்கிய உணவு என்கிற தனியார் தொழிற்சாலையின் சார்பாக கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மரம் நடும் விழா நடைபெற்றது.
புதுகும்மிடிப்பூண்டி அரசுமேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த விழாவில் கே.டி.வி நிறுவன நிர்வாக இயக்குனர் கே.டி.வி.நாராயணன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோ.மா.கிருஷ்ணமூர்த்தி, வெஸ்டர்ன் தாம்சன் நிறுவன மனித வள மேலாளர் சோலை ராஜன், புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பிரேமகுமாரி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை வரையிலும் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் புங்கை, வேப்பம், குலும்பர், பாதாம், அசோக மரம் ஆகியவை அடங்கும்.
தொடர்ந்து அடுத்த கட்டமாக மேலும் 1000 மரங்களை நட இருப்பதாக விழா முடிவில் பேசிய கே,டி,வி நிறுவன மனிக வள மேலாளர் யுவராஜ் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்