முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதிய ஜனதாவுடன் கூட்டணியா ? ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதில்

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்துவிட்டு திரும்பிய நாள் முதலே ஓ.பன்னீர்செல்வம், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகிறது.

உள்ளாட்சி தேர்திலில் கூட்டணி ?

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த மறுநாளே ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது அவர் பா.ஜ.கவை நெருங்குகிறாரா என்ற கேள்விக்கு முதல் கட்ட விடையாக இருக்குமா?என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இச்செய்தி ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் சுமார் காலை 10.35 மணியளவில் ஓ.பி.எஸ் ட்விட்டர் பக்கத்தில் மற்றுமொரு ட்வீட் பதிவானது. அந்த ட்வீட்டில், "உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே எந்த ஒரு கட்சியுடனான தேர்தல் கூட்டணி குறித்தும் முடிவு செய்வோம் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தோம்" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம்   சந்தித்துப் பேசினார்.  டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது அ.தி.மு.க (புரட்சித் தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.  சந்திப்பு முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், "பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை. பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஊகங்கள் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை" எனக் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்