முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு ‘வைல்டு கார்டு’ கேட்கமாட்டேன் - ஷரபோவா அதிரடி அறிவிப்பு

சனிக்கிழமை, 20 மே 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத கால தடையை அனுபவித்த 30 வயதான ஷரபோவா, விம்பிள்டன் டென்னிசுக்கு ‘வைல்டு கார்டு’ கேட்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

‘வைல்டு கார்டு’

ரஷ்ய டென்னிஸ் புயல் மரிய ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத கால தடையை அனுபவித்து மீண்டும் களம் திரும்பி விளையாடி வருகிறார். ஊக்கமருந்து பயன்படுத்திய அவருக்கு பிரெஞ்ச் ஓபனில் நேரடியாக பிரதான சுற்றில் கலந்து கொள்ள வகை செய்யும் ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்க எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் அவருக்கு வைல்டு கார்டு வழங்க மறுத்து விட்டது.

தகுதிச்சுற்று மூலம் ...

இதனால் எரிச்சல் அடைந்துள்ள 30 வயதான ஷரபோவா, விம்பிள்டன் டென்னிசுக்கு ‘வைல்டு கார்டு’ கேட்கப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். தகுதி சுற்றில் விளையாடி அதன் மூலம் பிரதான சுற்றை எட்ட தீர்மானித்து இருக்கிறார். தரவரிசையில் முதல் 128 இடங்களில் உள்ளவர்கள் மட்டுமே நேரடியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட முடியும். முன்னாள் சாம்பியனான ஷரபோவா தரவரிசையில் தற்போது 211-வது இடத்தில் உள்ளார். தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் பிரதான சுற்றை அடைய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்