முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

ஓசூர் கோட்டப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் முதல் முறையாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சப் கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்தார்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

இந்த கூட்டத்தில் ஓசூர்,சூளகிரி,தேன்கனிக்கோட்டை வட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் இயற்கை முறையில் சேதம் அடைந்தால் காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டதலைவர் ஸ்ரீராமரெட்டி கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பது வன விலங்குகளால் பயிர் சேதம்,உயிர் சேதம், விலங்குகளால் அடிப்படவர்களுக்கு நிவாரணம் சரிவர கிடைக்க வில்லை இதை உடனடியாக வழங்க வேண்டும். வறட்சியின் காரணமாக விவசாயிகளால் உரம் மற்றும் விதைகள் வாங்க முடியாத நிலை உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகளை இலவசமாக வழங்கிட வேண்டும்.

ஓசூர்,தேன்கனிக்கோட்டை,சூளகிரி வட்டாரப்பகுதிகளில் பட்டா மாற்ற அரசு அறிவித்த தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி ஆறு மாதத்திற்கு மேலாகியும் பட்டா வழங்கவில்லை. பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு மின் இணைப்பு வேண்டி பணம் செலுத்தியும் இணைப்பு தரவில்லை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள்,விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்