முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயல் அலுவலர் தேர்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 10.6.17 மற்றும் 11.6.17 அன்று நடைபெறவுள்ள செயல் அலுவலர் கிரேடு-தேர்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 10.6.17 மற்றும் 11.6.17   அன்று செயல் அலுவலர் கிரேடு-ஐஐஐஇ கிரேடு ஐஏ தேர்வு நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறவுள்ள செயல் அலுவலர் கிரேடு-ஐஐஐ தேர்வினை 10.6.17 சனிக்கிழமை அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் 2,076 நபர்களும், செயல் அலுவலர் கிரேடு- ஐஏ தேர்வினை 11.6.17 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் 3,309 நபர்களும் ஆக மொத்தம் 5,385 நபர்கள் விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி, வே.வ.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில்  எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 18 முதன்மை கண்காணிப்பாளர்கள்,  18 ஆய்வு அலுவலர்கள், 5 மொபைல் பார்ட்டிகள் ஆகியோர் முன்னிலையில் இத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னணு சாதனங்கள் (கால்குலேட்டர்,அலைபேசி) பயன்படுத்த அனுமதியில்லை. தேர்விற்கு செல்பவர்களுக்கு எந்தவொரு போக்குவரத்து சிரமமும் ஏற்படாத வண்ணம் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து வசதிகள்  சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் இருக்கைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் செய்ய தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளவும், தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின்  பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் தெளிவாகவும், பெரிதாகவும் வைக்கப்பட வேண்டும் என்றும், தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்குமாறும், தேர்வு அறைக்கு முன் அறையினுடை எண்கள் தெளிவாகவும், பெரிதாகவும் ஒட்டப்பட வேண்டும் என்றும்; சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.சி.முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)(பொ).அன்புநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.செல்வி(அருப்புக்கோட்டை), திரு.சங்கரநாரயணன்(பொ)(சிவகாசி), தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.முருகேசன், மாவட்ட கருவூல அலுவலர்மரியஜோசப், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செந்தில்ஆறுமுகம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து