முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி பெரியகுளத்தில் 7 கோடியே 8 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. இந்நீதிமன்ற வளாக திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையேற்று நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பாசத்தியநாராயணா முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற  நீதிபதி கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் பேசும்போது புதிய நீதிமன்ற வளாகம் கட்ட அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒப்புதல் பெற்று நிதியை ஒதுக்க முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார் என்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர்  செந்தில்குமார் கட்டட அறிக்கை வாசித்தார். மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி குமரேசன் நன்றி கூறினார். இவ்விழாவில்  வழக்கறிஞர்கள், ஊழியர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து