முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி தலைநகர் சான்ட்டியாகோவில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

சான்ட்டியாகோ, சிலி நாட்டின் தலைநகரான சான்ட்டியாகோ நகரின் வடகிழக்குப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென்னமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின்படி அடிக்கடி நிலநடுக்கத்துக்குள்ளாகும் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் உள்ளது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.15 மணியளவில் (இந்திய நேரப்படி பகல் 12.45 மணி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்த மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.

சான்ட்டியாகோ நகரின் வடகிழக்கே சுமார் 36 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானதாக ஐரோப்பிய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடிக்கடி நிலநடுக்கத்துக்குள்ளாகி வரும் சிலி நாட்டில் கடந்த 1960-ம் ஆண்டு 9.5 ரிக்டர் அளவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து