முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் பகுதியில் ஊடுருவல்: இந்தியா மீது சீனா அபாண்ட பழி புகார்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங :  லடாக் பகுதியில் உள்ள பங்காங் ஏரி பகுதியில் சீன படைகள் ஊடுருவ முயற்சி செய்ததோடு இந்தியா மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இந்தியாவின் மாநிலமான சிக்கிமில் உள்ள டோக்லம் பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் டோக்லம் பகுதியில் இருநாட்டு ராணுவமும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் காஷ்மீரின் வடக்கு பகுதியில் சீனா எல்லையையொட்டி இந்திய பகுதியான லடாக் உள்ளது. இதன் அருகில் பங்காங் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் 3-2 பகுதியானது சீனாவின் கண்காணிப்பில் உள்ளது. 3-ல் ஒரு பகுதியானது இந்தியாவின் கண்காணிப்பில் உள்ளது.

இந்திய கண்காணிப்பில் உள்ள பகுதிக்குள் கடந்த 15-ம் தேதி சீன படைகள் ஊடுருவின. இதை அறிந்த இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக சீன ராணுவத்தினரை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு மற்றும் கல்வீச்சு நடைபெற்றது. இறுதியில் சீன படைகள் விரட்டப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய தரப்பில் கூறுகையில் இந்தமாதிரியான சம்பவம் இருதரப்பினர்களுக்கும் நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தது. சீனா முதலில் இதுகுறித்து தெரியாது என்று தெரிவித்தது.

தற்போது இந்தியா மீது சீனா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. தங்கள் நாட்டு படையினர் வழக்கம்போல் பங்காங் ஏரியின் சீனாவுக்கு உட்பட்ட பகுதியில் எங்கள் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இந்திய படையினர் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் சீனா பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளது என்றும் இந்த சம்பவத்திற்கு இந்தியாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து