எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பதினேழு சிம் கார்டுகளை பயன்படுத்தி சாமியார் ரஹீமின் வளர்ப்பு மகள் தலைமறைவாக செயல்பட்டுவந்ததாக போலீசார் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் குர்மித் சிங். இவரது வளர்ப்பு மகளான ஹனிபிரித் சிங் கடந்த 38 நாட்களாக போலீசால் தேடப்பட்டு வந்தார் . வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்ட இவர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு , தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் தலைமறைவாக இருந்த போது மொத்தம் பதினேழு சிம் கார்டுகள் பயன்படுத்தியதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மிகவும் செல்வாக்கு பொருந்திய சாமியாரான குர்மித் சிங் சில நாட்களுக்கு முன் பாலியல் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்பை தொடர்ந்து அவரது வளர்ப்பு மகளான ஹனிபிரித் சிங்கும் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். கலவரங்களைத் தூண்டியது, தகாத உறவு வைத்துக் கொண்டது , கொலை முயற்சி என இவர் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருந்தன.
வளர்ப்பு தந்தை குர்மித் சிங்குடன் இவர் தகாத உறவு வைத்துக் கொண்டதாக ஹனிபிரித்தின் கணவரால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இதையடுத்து ஹனிபிரித்தின் கணவர், குர்மித்தின் ஆட்களுக்கு பயந்து தலைமறைவானார். ஹனி பிரித்தை போலீஸ் தேட தொடங்கியதும் அவரும் தலைமறைவாக வாழத்தொடங்கினார்.
இந்நிலையில் மூன்று மாநில போலீசார் ஹனிபிரீத் சிங்கை வலை விரித்து தேடிக்கொண்டிருந்தனர். 38 நாட்களாக எந்த மாநில போலீசின் கண்களிலும் படாமல் லாவகமாக தப்பித்துக் கொண்டிருந்தார் இவர். இந்த நிலையில் இவர் தலைமறைவாக இருந்த 38 நாட்களில் மொத்தம் பதினேழு சிம் கார்ட்டுகள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவர் பயன்படுத்திய 17 சிம் கார்டுகளில் 2 சிம் கார்டுகள் இன்டர்நேஷனல் சிம் கார்ட் ஆகும். ஹனிபிரீத் சிங் எந்த கேள்விகளுக்கும் சரியாக பத்தி அளிக்காததால் அவர் எப்படி சிம் கார்டுகளை பெற்றார் , யாரிடம் இருந்து பெற்றார் என்ற தகவலை சேகரிக்க போலீஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 19 hours ago |
மினி பான் கேக்1 week 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.