முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரை போர்க்களமாக மாற்றிவிட வேண்டாம் - முதல்வர் மெகபூபா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

பாரமுல்லா : இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மாநிலத்தை போர்க் களமாக மாற்றிவிடக் கூடாது என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய காவலர்களின் பயிற்சி நிறைவு விழா பாரமுல்லாவில் நடந்தது. இதில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மெகபூபா முப்தி, பின்னர் பேசுகையில்,

ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காஷ்மீர் மட்டும் அதற்கு எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீர் எல்லையில் ஏராளமாக ரத்தம் சிந்தப்படுகிறது. நாடு புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, காஷ்மீரை மட்டும் போர்க்களமாக மாற்றி விட வேண்டாம்  - காஷ்மீர் முதல்வர் மெகபூபா

ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காஷ்மீர் மட்டும் அதற்கு எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீர் எல்லையில் ஏராளமாக ரத்தம் சிந்தப்படுகிறது. நாடு புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, காஷ்மீரை மட்டும் போர்க்களமாக மாற்றி விட வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பாகிஸ்தானையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இரு நாடுகளும் நட்பு ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

காஷ்மீரில் போலீஸாக பணியாற்றுவது கடினம். உங்கள் முன் மிகப்பெரிய சவால்கள் நிறைய காத்திருக்கின்றன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபடும் போது நீங்கள் உங்கள் மக்களிடம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், பொறுமையை இழக்காமல் செயல்பட வேண்டும். இவ்வாறு மெகபூபா வேண்டுகோள் விடுத்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து