முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

கோவை, திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் ஸ்ருதியின் தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து பண மோசடி செய்துள்ளனர். மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். பலரிடம் மோசடி லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளையும் ஆடம்பரமாக செலவு செய்து படித்துள்ளார்.

ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பலருடன் பேசியுள்ளார். செல்போன், சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டிற்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார். ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து