முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் அதிபர் திடீர் ராஜினாமா

புதன்கிழமை, 21 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மியான்மர் :  மியான்மர் அதிபர் ஹிதின் கியா தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். இந்தச் செய்தியை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மியான்மர் அதிபர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில், "மியான்மர் அதிபர் ஹிதின் கியா மார்ச் 21 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவர் ஏழு நாட்களுக்குள் பதவி ஏற்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிதின் கியா தனது பதவியை ராஜினாமா செய்தற்காக சரியான விளக்கத்தை மியான்மர் அதிபர் அலுவலகம் அளிக்கவில்லை. அவருக்கு அவரது தற்காலிக பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது என்று மட்டுமே கூறியுள்ளது.

அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும்வரை மியான்மர் துணை அதிபர் மியிண்ட் ஸ்வே தற்காலிக அதிபராக இருப்பார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஹிதின் கியா மியான்மரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மகத்தான வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். சூகியின் மகன்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதால் மியான்மர் அதிபராக சூகி பதவியேற்க முடியாத நிலையில் மறைமுக ஆட்சி நடத்தும் வகையில் அதிபர் பதவிக்கு ஹிதின் கியாவை சூகி தேர்வு செய்தார்.

ஹதின் கியா, சூகியுடன் பள்ளிப் படிப்பு படித்தவர். சூகிக்கு மிகவும் விசுவாசமானவர் மட்டுமின்றி நேர்மையானவராகவும் கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து