முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஓவரில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அணி வென்றது

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத்: பரபரப்பான கடைசி ஓவரில் தில்லியை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வென்றது.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்-தில்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் 36-வது ஆட்டம் ஐதராபாத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியின் பிரித்வி ஷா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். பின்னர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்-ஷா சேர்ந்து அதிரடியாக ஆடினர். 10.1 ஓவரின் போது ரஷீத் கான் பந்து வீச்சில் கெளலிடம் கேட்ச் கொடுத்து பிரித்வி ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 65 ரன்களை எடுத்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் 44, பந்த் 18, ரன்களுடன் ஆட்டமிழந்தனர். நமன் ஓஜா 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். டேனியல் கிறிஸ்டியன் 7, விஜய் சங்கர் 23 ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஐதராபாத் தரப்பில் ரஷீத் கான் 2, கெளல் 1 விக்கெட்டை வீழ்த்தினர். 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை பெற்றிருந்தது.

164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவன் இணை களமிறங்கியது. தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் அதிரடியாக ஆடிய ஹேல்ஸ் 44 ரன்களிலும், தவன் 33 ரன்களிலும் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்ஸன், மணிஷ்பாண்டே ஆகியோர் இணைந்து பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். பாண்டே 21 ரன்களில் பிளங்கட் பந்தில் ஆட்டமிழந்தார்.

யூசுப் பதான் கடைசி ஓவரில் 13 ரன்களையும் அடித்து ஐதராபாத் வெற்றி பெற வழிவகுத்தார். வில்லியம்ஸன் 32 ரன்களிலும், பதான் 27 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் மிஸ்ரா 2 விக்கெட்டையும், பிளங்கட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து