முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி தொடர்பாளருக்கு பதிலாக நடிகை பிரியங்கா சோப்ராவை டுவிட்டரில் டேக் செய்த காங்.

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை காங்கிரஸ் டேக் செய்தது டுவிட்டரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் விதமாக மண் பரிசோதனைக் கூடங்கள் அமைத்து அதில் இயற்கையாகவும், எளிமையாகவும் விளையும் பயிர்கள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி திட்டம் ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் வலைதளத்தில், மண் பரிசோதனைத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, பொய் கூறுகிறார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் இதுபோன்ற 1,141 மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பதிவிட்டிருந்தது.

ஆனால், இந்த பதிவில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை டேக் செய்தது. பின்னர் இந்தப் பதிவை டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டது. இது பெரும்பாலான டுவிட்டர் பயனாளர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து