முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை, அன்னை போல் கவனித்து வரும் 6 வயது சிறுமி

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,சீனாவில் 6 வயதுக்குட்டிப் பெண், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு பள்ளிக்கும் சென்று வருவது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதோடு சிறுமிக்கு ஏராளமான பாராட்டுகளையும் குவித்துள்ளது.

சிறுமியின் தந்தை டியான் ஹாய்செங் சீனாவின் நிங்சியா மாகாணத்தைச் சேர்ந்தவர். 40 வயதான டியான், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கடுமையாகக் காயமுற்றதில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய்க்கு தன் கணவரது பக்கவாதப் பாதிப்பை சகித்துக் கொள்ளும் மனமில்லாத காரணத்தால் அவர் தன் கணவரையும், 6 வயதுப் பெண் குழந்தையையும் விட்டு விட்டு தன் மூத்த மகனோடு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். முதலில் சில நாட்களுக்கு மட்டும் அங்கிருந்து விட்டு பிறகு கணவரது வீட்டுக்கு திரும்புவதாகச் சொன்ன மனைவி மீண்டும் திரும்பி வரவே இல்லை.

சிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறி சேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த தந்தைக்குத் தேவையான மசாஜ். பின்னர் தந்தைக்கு பல் துலக்கி விட்டு முகம் கழுவித் துடைத்து சுத்தம் செய்து முடிப்பார். அதன் பின் தான் பள்ளி செல்லும் நேரத்தில் தந்தையை வயதான தாத்தா, பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டுப் பள்ளி செல்லும் ஜியா பள்ளி விட்டு வந்தது முதலே, தந்தைக்கு உணவு ஊட்டுவது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது, வீட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி நாற்காலி மற்றும் மேலெழும்பியும், கீழிறக்கியும் இயக்கக் கூடிய வகையிலான தானியங்கி கம்பத்தின் மூலம் தந்தையை தூக்கி அமர வைப்பது, வீட்டைச் சுற்றி உலவச் செய்வது என மீண்டும் தன் தந்தைக்கான உதவிகளை செய்து வருகிறாள். சீன ஊடகமொன்றின் நேர்காணலில் சிறுமி ஜியா பதில் அளித்திருப்பது இந்தச் சிறு வயதில் அவளுக்கு வாய்த்திருக்கும் மன உறுதியைக் காட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து