முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷிய விபத்து: விமான பாகங்களை தேடும் பணி தீவிரம்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஜகார்தா : இந்தோனேஷியாவில் 189 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், விபத்துக்குள்ளான கடல் பகுதியிலிருந்து மேலும் மனித உறுப்புகளை மீட்புக் குழுவினர் நேற்று முன்தினம் மீட்டனர்.

இதுகுறித்து இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்டுக் குழு அமைப்பின் தலைவர் முகமது சையாகி தெரிவித்ததாவது:-

லயன் ஏர் விமானம் கடந்த திங்கள்கிழமை விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தேடுதல் பணிகளில் மீட்கப்பட்ட கைகள், கால்கள் மற்றும் பிற மனித உடல் பாகங்களைக் கொண்ட 10 பைகளை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

கடலின் மேல் பகுதியில் கிடைத்த அனைத்து உடல் பாகங்கள் மற்றும் பொருள்கள் மீட்கப்பட்டுவிட்டன. கடலுக்குள் மூழ்கிய விமானத்தின் முக்கிய பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை விரைவில் கண்டறிவோம் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இதுதவிர, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அடங்கிய மேலும் 14 பைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து