முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தங்கல்லில் பொதுமருத்துவ முகாம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - திருத்தங்கல்லில் பொதுமருத்துவ முகாமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்
சிவகாசி காஸ்மாஸ் அரிமா சங்கம், திருத்தங்கல் ஜேசிஐ, விருதுநகர் மாவட்ட  கணினி விற்பனையாளர் சங்கம் மற்றும் சிவகாசி நோய்தடுப்பு மருத்துவதுறை  சார்பாக பொது மருத்துவ முகாம் திருத்தங்கல்லில் நடைபெற்றது. இலவச சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். மருத்து உதவி பெறும்  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய சிகிச்சை  அளிக்க சிறப்பு மருத்துவர்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார் இந்நிகழ்வில். அதிமுக நகர செயலாளர் பொன்.சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர்கள் ரமணா, அ.செல்வம், 17வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜாக்குட்டி, 15வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் காளிராஜன், 6வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், நகர இளைஞரணி சிவகாசி யுவராஜ், 20'வது வார்டு மேலவை பிரதிநிதி சிவகாசி கார்த்திக், சிவகாசி ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பள்ளபட்டி கே.அழகர், கழக தகவல் பணி ராஜா, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் எம்.கே.என்.செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு மருது்துவர்கள், காஸ்மாஸ் அரிமா சங்கம் நிர்வாகிகள், திருத்தங்கல் ஜேசிஐ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நில வேம்பு கசாயம் வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து