முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் என தமிழில் கூறி பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அழகிய தமிழில் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூற அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார் கனடா பிரதமர் ஜஸ்டின். எப்பவுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின், அன்று நம்முடைய பாரம்பரிய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கும் அவர், பிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார். ஜஸ்டினின் இந்த சர்க்கரை பொங்கல் பேச்சு வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து